2024 – 2025 ஆம் ஆண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள மாணவர்கள் www.tnheath.tn.gov.in என்ற சுகாதார துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை, சென்னை – 600106 என்னும் முகவரிக்கு வருகின்ற ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் தபால், கூரியர் மூலம் அல்லது நேரில் வந்து சமர்ப்பிக்கலாம்.