மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில், நாடாளுமன்றத்தில் நாளையோடு பட்ஜெட் மீதான விவாதம் முடிகிறது. ஆனால் இன்று வரை ரயில்வே திட்டங்கள் குறித்த பிங்க் புக் வெளியிடப்படவில்லை. 2017 ல் ரயில்வே பட்ஜெட்டை ஒழித்தார்கள். இப்பொழுது ஆவணங்களை வெளியிடும் முறையையும் ஒழிக்கிறார்கள். இந்த எதேச்சதிகார பாஜக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 1 இல் தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகள் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.