தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு ஜூன் 30 நேற்று தொடங்கிய நிலையில் அக்டோபர் 29ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நேற்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை மற்றும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் டிக்கெட் 15 நிமிடங்களில் விற்று தீர்ந்தது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 30ம் தேதி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. தற்போது கன்னியாகுமரி, நிஜாமுதீன், அனந்தபுரி மற்றும் திருச்செந்தூர் ஆகிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடந்து வருகின்றது.