உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் சண்டிகர் – திப்ரூகர் விரைவு ரயில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் நிவாரணம் அறிவித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ₹10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ₹2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ₹50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.