ரஷ்யாவின் மிக உயரிய ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு வழங்கி கௌரவித்துள்ளது. ரஷ்யா – இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்த ஆற்றிய பணிகளுக்காக மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் புதின் தெரிவித்தார். ரஷ்யாவின் பாரத் ரத்னா எனப் போற்றப்படும் 326 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.