உக்ரைனின் வடகிழக்கு பகுதியான சுமியில் உள்ள ஸ்டெட்ஸ்சோவ்காவில் அந்நாட்டு ராணுவத் தளம் உள்ளது. அதன் மீது ரஷ்ய படைகள், இஸ்காண்டர்-எம் ஏவுகணையை வீசித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் ராணுவத் தளமும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 20 ராணுவ வாகனங்களும் பலத்த சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 65 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் கூறப்படுகிறது.