காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பான சகோதரரே ராகுல் காந்தி! நம் நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.