மக்களவையில் அண்மையில் பேசிய ராகுல் காந்தி, சிவன் படத்தை காட்டி, பாஜக என்ன இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அவரின் இந்த ஆவேசப் பேச்சு, பாஜகவில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவராக பல விவகாரங்களில் அவர் குடைச்சல் கொடுப்பார், இதை பாஜக எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.