காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 54 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ராகுல் காந்தி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கையில் 55 ஆயிரம், வங்கிகளில் 26,25,157 ரூபாய் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதுதவிர பங்கு சந்தையில் ரூ.4 கோடியே 33 லட்சத்து 60 ஆயிரத்து 519 உள்ளதாகவும், Mutual fund வழியாக ரூ. 3 கோடியோ 81 லட்சத்து 33 ஆயிரத்து 572 உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சில சொத்துகளை சேர்த்து மொத்தமாக ரூ.9 கோடியே 24 லட்சத்து 59 ஆயிரத்து 264 மதிப்பிலான அசையும் சொத்து ராகுல் காந்தியிடம் உள்ளது. இதனுடன் ரூ.11 கோடியோ 15 லட்சத்து 2 ஆயிரத்து 598 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.