டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழ்நாடு எம்.பி.க்கள் ஆகியோர் சந்தித்தனர். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாததால் பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை என்று ராகுல் காந்தியிடம் எடுத்துரைத்தனர். மேலும் இதுதொடர்பாக ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திக்க உள்ளார்.