மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வலதுசாரி இந்துக்களை ‘வன்முறையாளர்கள்’ என கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் அவருக்கு எதிராக பாஜக & சங்பரிவார அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, “தேர்தல் நேர இந்துவான ராகுல் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும்வரை தொடர்ந்து போராடுவோம்” என்று தெரிவித்தார்