ஒடிஷாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான எம்பி மம்தா மொஹந்தா தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும், பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இனி என்னுடைய சேவை உங்களுக்கு தேவைப்படாது” என்று குறிப்பிட்டுள்ளார்.