உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பல நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்த வரிசையில் ஜம்மு காஷ்மீர் எல்லையிலும் ராணுவ வீரர்கள் யோகா செய்தனர். அப்போது அவர்களுடன் ராணுவ நாய்களும் இணைந்து யோகா செய்தது கவனம் ஈர்த்தது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.