ராயன் படத்தின் கூடுதல் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. காலை 9 மணிக்கு மேல் முதல் காட்சி தொடங்கி, இரவு 2 மணிக்குள் இறுதி காட்சியை முடித்துவிட வேண்டும் எனவும் படக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கி, நடித்துள்ள இந்த படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் காளிதாஸ், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.