நாடு முழுவதும் 27.50 லட்சம் பேர் புதிதாக பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளதால் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்கள் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை வாங்கி வருகிறார்கள்.