ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது கட்டணத்தை குறைத்து புதிய பிளானை அறிவித்துள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் 249 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். மொத்தம் 90 ஜிபி டேட்டா ஒரு நாளைக்கு இரண்டு ஜிபி க்கு சமம் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.