மத்தியப் பிரதேசத்தில் மொரேனா மாவட்டத்தில் 11 வயது சிறுவன், ஆன்லைன் ஸ்டண்ட் ஒன்றை மீளுருவாக்கம் செய்ய முயன்று உயிரிழந்தார். 7ஆம் வகுப்பு படித்து வந்த கரண், தனது நண்பர்களை ரீல்ஸ் வீடியோ எடுக்க கூறிவிட்டு, ஆன்லைனில் பார்த்த காட்சியை போன்று தனது கழுத்தில் கயிறு கட்டி நடித்துள்ளார். ஆனால், திடீரென கயிறு இறுகியதால், மூச்சுத்திணறி உயிரிழந்தார். ஆரம்பத்தில் கரண் நடிப்பதாக அவரது நண்பர்கள் கருதியுள்ளனர்.