பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26- ஆகஸ்ட் 11ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள 195 பேர் கொண்ட இந்திய குழு செல்கிறது. அவர்களுக்காக மத்திய அரசு ரூபாய் 33.68 கோடி செலவிடவுள்ளது. இந்தத் தொகை டோக்கியோ ஒலிம்பிக் சென்ற இந்திய குழுவுக்கு செலவிடப்பட்டதை (ரூ13.13 கோடி) விட 2 மடங்குக்கும் மேல் அதிகமாகும். இத்தொகை பயணம், தங்குமிடம், விளையாட்டு சாதனம் உள்ளிட்டவற்றுக்கு செலவிடப்படும்.