2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் 9 அம்சங்களை முன்னிறுத்தி தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி விவசாய உற்பத்தித்திறன் *வேலைவாய்ப்பு மற்றும் திறன் *மேம்பட்ட மனித வளம், சமூக நீதி *உற்பத்தி மற்றும் சேவைகள் *நகர்ப்புற வளர்ச்சி *ஆற்றல் பாதுகாப்பு உள்கட்டமைப்பு *புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு *அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்.
மாணவர்கள் உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில ₹10 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு இக்கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.