கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் மூலமாக அபகரித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்த விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான முன்ஜாமின் மனு தள்ளுபடியானதால் தொடர்ந்து தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை தமிழகத்தில் 2 தனிப்படைகளும், வெளிமாநிலத்தில் 3 தனிப்படைகளும் தேடி வருகின்றன.