பிரபாஸ், தீபிகா நடிப்பில் வெளியான கல்கி 2898 திரைப்படம் ரூ.1,000 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவான இப்படம், ஜூன் 27ஆம் தேதி வெளியானது. ரூ 600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், 17 நாள்களில் ரூ 1,000 கோடி வசூல் செய்துள்ளது. திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.