‘ஏர் ஃபைபர்’ பயனர்களுக்கு ஜியோ மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது ‘ஜியோ ஃப்ரீடம் ஆஃபர்’ என்ற பெயரில் கட்டணமின்றி புதிய ஜியோ ஏர் ஃபைபர் இணைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. ‘ஃப்ரீடம் ஏர் ஃபைபர்’ சலுகையின் கீழ், புதிய பயனர்கள் ஒரே நேரத்தில் 30 சதவீத தள்ளுபடியைப் பெறுவார்கள் என ஜியோ தெரிவித்துள்ளது. ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை புதிய வாடிக்கையாளர்களுக்கு நிறுவல் கட்டணம் ரூ.1000 தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.