தமிழகத்தில் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட இருக்கும் நிலையில், ஆதார் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளி நிறுவனங்களே ஆதார் கார்டு பெற ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது மாணவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து இருக்க வேண்டும், தகுதியான மாணவர்களை கண்டறிய ஆதார் அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது.