‘கங்குவா’ திரைப்படத்தின் கேரள உரிமம் ரூ.10 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய சூர்யா படங்களை காட்டிலும் அதிகமாகும். ஆனால், ‘கங்குவா’ உரிமத்தை வாங்கிய அதே விநியோக நிறுவனம், ‘தி கோட்’ படத்தை ரூ.17 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் படம் வெளியாவதற்கு முன்பான வர்த்தகத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் திரைப்படமாக ‘தி கோட்’ உள்ளது.