அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் தனது பள்ளி கால நினைவுகளை நடிகர் சிவக்குமார் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். தான் எஸ்எஸ்எல்சி படித்து முடிக்க வெறும் ரூ365.50 செலவானதாகக் கூறிய அவர், தற்போது கார்த்தி மகனின் பிரிகேஜி படிப்புக்கு ரூ2.50 லட்சம் கேட்பதாகக் கூறினார். பணம் இல்லாததால், பள்ளியில் குரூப் போட்டோ எடுக்க முடியவில்லை எனவும், தற்போது எந்த குரூப் போட்டோ பார்த்தாலும் உறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.