2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் வேளாண் & பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி ₹49.23 லட்சம் கோடியாகச் சரிந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இது 3% குறைவாகும். காசா போர் காரணமாக செங்கடல் வர்த்தகப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, கன்டெய்னர் பற்றாக்குறை போன்றவற்றால் இத் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.