டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது. மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திட்டமிட்டபடி திறக்கப்படாததால் குருவை சாகுபடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் படி ரூபாய் 78.67 கோடியில் குருவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் 2000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய முறையில் ரூபாய் 3.85 கோடியில் தரப்படும். டெல்டா மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூபாய் 24.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.