உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் ₹822 கோடி குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைத்துள்ளது . குத்தகை காலம் 1978 உடன் முடிந்த நிலையில் அதன்பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் மைதானம் இயங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.