ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து குடும்ப அட்டைதாரர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அரசு இறுதி முடிவு எடுக்கும். 2 நாள்களுக்கு முன், ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.