தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்ல முடியாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் இன்றியமையா பொருட்களை பெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக மூன்று லட்சத்து 15,437 குடும்ப அட்டைதாரர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்பட்டு இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 733 குடும்ப அட்டைதாரர்கள் பிரதிநிதிகள் மூலமாக பொருட்களை பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.