தமிழ்நாடு முழுவதும் ஜூலை 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.