தமிழ்நாடு முழுவதும் “பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் நாளையும் (ஜுலை 13), அடுத்தடுத்த தேதிகளில் மற்ற மாவட்டங்களிலும் நடைபெறும் குறைதீர் முகாமில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.