ரேஷன் அட்டையில் திருமணமான மகன், மகள் பெயர் இருப்பின், அவர்கள் புதிதாக அட்டை வாங்க ஏதுவாக பெயர் நீக்கப்படும். ஏற்கெனவே காலமான நபரின் பெயர் இருந்தால் அவரின் பெயர் நீக்கப்படுவது அவசியமாகும். இதற்கு சில நடைமுறை அரசால் பின்பற்றப்படுகிறது. தாலுகா அலுவலகம் சென்று உணவு வழங்கல்துறை அதிகாரியிடம் விண்ணப்பித்து, பெயரை நீக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பித்தும், ரேஷன் அட்டையில் பெயரை நீக்கலாம்.
https://www.tnpds.gov.in இணையதளத்துக்கு சென்று, பயனாளர்கள் நுழைவு என்றிருக்கும் இடத்தில், ரேஷன் அட்டைக்கு கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை குறிப்பிட்டு, உள்ளே செல்ல வேண்டும். அப்படி சென்றால், உள்ளே “சேவை தேர்வுகள்” என்ற பகுதியில் “குடும்ப உறுப்பினர் நீக்குக” என்ற பிரிவை அழுத்தி, பெயர் நீக்க காரணத்தை குறிப்பிட வேண்டும்.