நடிகர் அஜித்குமார், கார், பைக் ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவர். சமீபத்தில், பைக் மூலம் உலக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அஜித், அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில், ஃபார்முலா பந்தயங்களில் பயன்படுத்தப்படும் காரை அஜித் ஓட்டிச் சென்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் ஜான் கொக்கென் பகிர்ந்த இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
