திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 21ஆம் தேதி இன்று ஒரு நாள் மட்டும் ரோக்கர் சேவை இயங்காது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி வரும் பக்தர்கள் படி வழிப் பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்திக் கொள்ளும்படி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று பௌர்ணமி தினம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்பதால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.