கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்தது நான் தான் என்பதையே பலர் மறந்துவிட்டதாக பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். ரோஹித் வசம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த போது தன் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், இப்போது ரோஹித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளதாக பாராட்டியுள்ளார்.