2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.
இதில் ரோஹித் சர்மா டி20 அணியை வழிநடத்தி வந்ததால், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே, ருதுராஜ், ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக், சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி சென்றிருக்கின்றனர். எனவே மீண்டும் இவர்களில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா அல்லது புதியவருக்கு வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.