களத்திலும், களத்திற்கு வெளியேயும் ரோஹித் ஷர்மா சிறந்த கேப்டனாக இருந்ததாக இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். கேப்டனாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் அதே நேரத்தில், மிகப்பெரிய பொறுப்பு இருப்பதையும் உணர்வதாக கூறிய அவர், ரோஹித் ஷர்மாவிடமிருந்து ஆடுகளத்தில் விளையாட மட்டுமல்ல, பண்போடு அணுகவும் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.