ராகுல் காந்தி நேரில் சந்தித்த செருப்பு தைக்கும் தொழிலாளி ராம் சேட், பிரபல நபர் ஒருவர் எனக்கு போன் செய்து ராகுல்காந்தி தைத்து கொடுத்த செருப்பை ரூ.5 லட்சத்திற்கு தருமாறு கேட்டார். அந்த செருப்பு எனக்கு கிடைத்த அதிர்ஷடம் நான் யாருக்கும் விற்கவோ, தரவோ மாட்டேன் என அவரிடம் தெரிவித்துவிட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை அவற்றை கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த செருப்புகளை யாருக்கும் கொடுக்க மாட்டேன். ராகுல் காந்தி தைத்த செருப்புகள் எனக்கு விலைமதிப்பற்றவை என தெரிவித்துள்ளார்.