காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலியைச் சேர்ந்த சின்னராசுவின் மகள் நிஷா (8). இவர் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். சின்னராசு, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகின்றார். இவர் தனது மகளுடன் நேற்று முன்தினம் இரவு நெமிலி சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். ஸ்ரீபெரும்புதுார் நோக்கி வந்த டாரஸ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.