ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பயங்கர விபத்து நடந்தது. ஷியாம்நகரில் வசிக்கும் 43 வயதான ருக்மணிபாய் என்பவர் அடுக்குமாடி கட்டிடத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். கடந்த வியாழக்கிழமை மதியம் வீட்டிற்கு செல்வதற்காக லிப்டில் ஏறினார். ஆனால் மின் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக லிப்ட் நிறுத்தப்பட்டது. அதில் சுமார் 45 நிமிடங்கள் அவர் சிக்கிக்கொண்டார். சில பெண்கள் அவரை காப்பாற்ற முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.