கேரளாவை சேர்ந்த இளைஞர், இளம் பெண் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்துள்ளார். அந்த இளைஞர் தாக்கியதாக பெண் புகாரளித்ததால், போலீசார் குடும்ப வன்முறை பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இளைஞர் மீதான குடும்ப வன்முறை வழக்கு தவறானது எனத் தெரிவித்துள்ளது. லிவிங் டுகெதர் என்பது உறவில் பங்குதாரர் மட்டுமே என்ற நீதிமன்றம், இது சட்டப்பூர்வ திருமணம் அல்ல எனக் கூறியுள்ளது.