உ.பி. மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், வேலை நேரத்தில் மொபைலில் கேண்டி க்ரஷ் விளையாடிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பன்சியா, மாணவர்களின் நோட்டை சரிபார்த்தார். அதில் ஏராளமான தவறு இருந்த நிலையில், ஆசிரியரின் செல்போனை ஆய்வு செய்த போது, வேலை நேரத்தில் சராசரியாக 5 மணி நேரம் அவர் மொபைலை பயன்படுத்தியது அம்பலமானது.