சென்னை வானிலை மையம் அடுத்த 7 நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று முதல் 21ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.