வங்கிகள் தங்களது இடர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்று ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிவுறுத்தியுள்ளார். தங்களது வருவாயை முதலீடு செய்வதற்கு வங்கிகளைத்தான் தேர்வு செய்துவந்த தனி நபர்கள் தற்போது பரஸ்பர நிதி திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்வதாகக் கூறிய அவர், இதனால் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் நிலை வைப்பு நிதி போன்ற முதலீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.