இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது வங்கிகள் எச்சரிக்கை விடுத்தது வருகின்றன. இந்நிலையில் வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் இருந்தால் அதனை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
செல்போனுக்கு வரும் லிங்க்குகளை கவனமாக திறக்க வேண்டும். தேவையில்லாத APP-களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். வங்கி கணக்கு விவரங்கள், ஆதார், ஓடிபி போன்றவற்றை தெரியாத நபர்களிடம் பகிர கூடாது. கூகுள் தேடலின் போது கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை சைபர் கிரைம் நடந்தவுடன் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது cyber.crime.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்ய வேண்டும்.