வங்கிக் கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணம் திருடுவதை தடுக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது. ஓடிபி மட்டுமல்லாது PIN அமைக்கும்படியும் குறுந்தகவல் மற்றும் லிங்குகளை நம்பி டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. பணத்தை திருடும் முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrim.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.