சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 8இல் உத்தரவு என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கவும், வங்கி ஆவணங்களை தரக்கோரியும் வழக்கு தொடர்ந்தார். இதில், வங்கி ஆவணங்களை கோரிய வழக்கில் ஜூலை 8இல் தீர்ப்பு என நீதிபதி அறிவித்துள்ளார்.