பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கிய படம் ‘கல்கி 2898ஏடி’. இப்படம் இதுவரை ரூ.1,100 கோடி வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், விஜய் தேவரகொண்டா, திஷா பதானி, ராஜேந்திர பிரசாத், ஷோபனா, பசுபதி, அன்னா பென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜுன் 27ஆம் தேதி வெளியானது.