நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் பயணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அனைத்து மக்களும் பயணிக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் கட்டணத்தை குறைக்க உள்ளதாக மத்திய ரயில்வே இணைய அமைச்சர் அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.